டயகம பகுதியைச் சேர்ந்த சிறுமி ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரியும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் மேலும் மடூல்சீமை அமுனுதோவை மக்கள் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம்.

இன்றைய தினம் மடூல்சீமை அமுனுதோவை தோட்ட மக்கள் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்

. இவ்வார்ப்பாட்டமானது அமுனுதோவை தோட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு நடை பேரணியாக சுகாதார விதிமுறைகளை பின்பற்றி மடூல்சீமை நகருக்கு சென்றடைந்து அங்கு அமைந்திருந்த புத்தர் சிலைக்கு முன்பாக மெழுகுவர்த்தி ஏற்றி சிறுமி ஹிஷாலினிக்கு அஞ்சலி செலுத்திய பின் சிறுமி ஹிஷாலினிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பியும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வார்ப்பாட்டத்தில் அமுனுதோவை மக்களுடன் மடூல்சீமை நகரிலுள்ள பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ராமு தனராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed