பசறை பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று முற்றுகை.

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 54 வயதுடைய நபர் ஒருவர் பசறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மில்லபெத்த பகுதியில் நபர் ஒருவர் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுவதாக பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து உடன் மில்லபெத்த பகுதிக்கு விரைந்து குறித்த பகுதியில் சுற்றிவளைபினை மேற்கொண்டனர். இதன்போது 180750 மில்லி லீட்டர் கோடாவும் கைப்பற்றப்பட்டதோடு 54 வயதுடைய அதே பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தபடும் சில உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபரை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி .ராமு தனராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *