வர்த்தக அமைச்சுக்கான வாசஸ்தலத்தை அமைச்சர் பந்துல குணவர்தன மீண்டும் பொது நிர்வாக அமைச்சிடம் கையளித்துள்ளார். 

கடந்த அரசாங்கத்தில் ரிஷாட் பதியுதீன் வர்த்தக கைத்தொழில் அமைச்சராக பதவி வகித்தபோது, குறித்த வாசஸ்தலத்தை  பயன்படுத்தியிருந்தார். 

இந்நிலையில், பணி்ப்பெண்கள் சிலர் குறித்த இல்லத்தினுள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிப்பட்டிருந்த விடயம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இதற்கு முன்னதாக கொழும்பு 7 மெகென்ஸி வீதியில் அமைந்துள்ள மேற்படி இல்லத்தை முன்னாள் வர்த்தகக் கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பயன்படுத்தியிருந்த நிலையில், குறித்த காலப்பகுதியில் அந்த இல்லத்தில் பணிப்பெண்கள் சிலர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

இந்த குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, குறித்த இல்லத்திலுள்ள இரண்டு அறைகளை சீல் வைக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். 

அவ்வாறே, இந்த உத்தியோகபூர்வ  வாசஸ்தலத்தின் புனரமைப்பு பணிகளுக்காக 21 மில்லியன் ரூபா பொது நிதி செலவிடப்பட்டமை ஒருபோதும் அனுமதிக்கமுடியாததொன்று என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 

அதற்கமைய, வறுமையினால் கஷ்டப்பட்ட சிறுமிகளுக்கு இந்த இல்லத்தினுள் நடந்ததாக சந்தேகிக்கப்படும் கொடுமைகளின் மிகவும் பாரதூரமானது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, குறித்த வாசஸ்தலத்தை அதிகாரபூர்வமாக மீள பொது நிர்வாக அமைச்சிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜயவர்தனவுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *