மூதூர் பிரதேச சபையின் உப அலுவலகங்களுள் ஒன்றான சம்பூர் உப அலுவலகத்தின் செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கிலான வலுவூட்டல் மற்றும் மக்கள் விழிப்புணர்வுக் கலந்துரையாடல் இன்று சம்பூர் பண்பாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது சம்பூர் உப அலுவலகத்துக்குட்பட்ட, கிராமிய அமைப்புக்களின் தலைவர்கள், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர், பொ. சற்சிவானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச சபையின் செயலாளர் திருமதி வ.சத்தியசோதி , பிரதேச சபை உறுப்பினர் து .ஜெகன் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பணிமனையின் சிரேஷ்ட ஆய்வு உத்தியோகத்தர் திரு.ச.சர்வேஸ்வரன், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், உள்ளிட்ட பல கிராமிய அமைப்புக்களின் பிரதிநிதிளும் கலந்து கொண்டனர்.

இங்கு பிரதேச சபைச் சட்டங்கள், உப அலுவலகங்கள் ஊடாக பிரதேச சபையின் சேவைகளை இலகுபடுத்தல், மற்றும் சபையின் கடமை பற்றியும் இங்கு ஆராயப்பட்டது. உள்ளுராட்சி மன்றங்களின் கடமைகள் பற்றி ஆய்வு உத்தியோகத்தர் தெளிவுபடுத்தினார். உப அலுவலகங்களின் ஆளணி வளம் பற்றி செயலாளர் கருத்துரைத்தார்.

எதிர்காலத்தில் உப அலுவலக பணியை ஆரோக்கியமாக்க பொதுமக்கள் பிரதிநிதிகள் ஏழுபேரைக்கொண்ட குழு தெரிவுசெய்யப்பட்டதுடன் சபையின் கௌரவ உறுப்பினர்களுடன் இவர்கள் உப அலுவலக மட்டத்தில் கூட்டங்களை நடாத்தவும் முடிவெடுக்கப்பட்டது.
உப அலுவலகச் செயற்பாட்டை துரிதப்படுத்த முடியுமான நடவடிக்கைகளை தான் எடுப்பதாக செயலாளர் சத்தியசோதி உறுதியளித்துள்ளார்.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed