மீகொடை – வட்டரெக சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த 5 மாத குழந்தைக்கும், பாட்டிக்கும் கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக பரிசோதனையின்போது தெரியவந்துள்ளது.

எனினும் உயிரிழந்த சாரதிக்கு கொவிட் தொற்று உறுதியாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், சம்பவத்தினால் காயமடைந்த குழந்தையின் தாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த 3 ஆம் திகதியன்று முச்சக்கரவண்டியும், பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதியதில் இடம்பெற்ற இந்த விபத்தில் 5 மாத குழந்தையும் அதனது பாட்டியும், முச்சக்கரவண்டி சாரதியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *