கல்கமுவ காவல்துறை பிரிவுக்குட்பட்ட மஹன்னேரிய பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று (07) காலை கல்கமுவ காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 28 வயதான தாயும், 10 வயதான மகனும் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதுடன், கொலை செய்த சந்தேக நபர் ஆகியோரின் சடலங்களும் அவ்விடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

உயிரிழந்த இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தரக்கம் காரணமாக குறித்த நபரினால் பெண் மற்றும் சிறுவன் கொலை செய்யபட்டிருக்காலம் எனவும், அதன் பின்னர் அவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் நீதவான் பரிசோதனை இன்று நடைபெறவுள்ளது.

அத்துடன், சம்பவம் தொடர்பில் கல்கமுவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகள முன்னெடுத்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed