உலக நாடுகள் பலவற்றில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திவரும் டெல்டா கொவிட் -19 திரிபு இலங்கையிலும் அதிவேகமாக பரவி வருவதால் அனைவரும் விரைவாக கொவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர். 

அத்துடன், அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக வீட்டிலிருந்து வெளியில் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்ககளம் அறிவித்துள்ளது. 

கொவிட் தொற்றாளர்களில் 1.5% மானோர் மரணிக்கின்றனர். பெரும்பாலானோர் தீவிர சிகிச்சை பிரிவுகளிலும் அனுமதிக்கப்படுகின்றனர். 

எனவே ஆட்கொல்லி கொவிட் வைரஸிடமிருந்து தற்காத்து கொள்ள பின்வரும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

அத்தியாவசியமான காரணங்கள் தவிர்ந்த வேறு விடயங்களுக்காக  வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.

திருமணங்கள், இறுதி சடங்குகள் மற்றும் பிற விழாக்களில் பங்கேற்பதை முற்றாக நிறுத்துமாறு கோரப்பட்டுள்ளது. 

பொது இடத்திற்கு செல்லும் போது முகக்கவசம் (மாஸ்க்) அணிவது அவசியம். 

அறைகள், அரங்குகள், மின்தூக்கி (லிஃப்ட்)  மற்றும் வாகனங்கள் போன்ற மூடப்பட்ட பகுதிகளில் கூட்டமாக இருப்பதை தவிர்க்கவும்.

அவ்வப்போது கைகளை சவர்க்காரம் கொண்டு கழுவுவதோடு, மற்றையவர்களிடமிருந்து இரண்டு மீற்றருக்கு மேல் இடைவெளியை பேணுங்கள். 

நாட்பட்ட நோய்களை கொண்டுள்ளவர் வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்க்குமாறு அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *