நாட்டில் கொரோனா தொற்று, “மக்கள் கொத்தணி” யாக மாற்றமடைந்துவிட்டது. நிலைமையை பார்க்குமிடத்து, அவ்வாறே ஒவ்வொருநாளும் தொற்றாளர்கள் மரணிப்பார்களாயின், அவர்களின் பூதவுடல்களை எரியூட்டுவதற்கு தகனசாலைகள் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நிலைமையை பார்க்குமிடத்து பாண் தயாரிக்கும் வெதுப்பகத்திலேயே சடலங்களை எரிக்கவேண்டிய நிலைமை ஏற்படும்” என அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் எச்சத்துள்ளார்.

கொரோனா தொற்றொழிப்பு தொடர்பில் அரசாங்கமும்  அதிகாரத்தில் இருக்கும் ஏனையோரும் நடத்தும் ஊடக கண்காட்சியை உடனடியாக நிறுத்தவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ள அவர், சரியான நேரத்தில் நாட்டை முடக்காது, நாட்டை முடக்குவது தொடர்பில் இப்போதாவது கதைப்பது சரியான செயற்பாடாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *