திருக்கோணமலையின் களநிலை எழுத்தாளர் கதிர் திருச்செல்வம் அவர்களின் உனக்குள் நீ எனும் சிறுகதை தொகுப்பு கடந்த 09.08.2021 ம் திகதி மாலை 06 மணிக்கு திருகோணமலை கிறீன் துளசி உணவகத்தில் வெளியீடு செய்யப்பட்டது .

ரசவாதம் ,குறியிடல் மூலம் திருக்கோணமலையின் இலக்கிய தளத்தில் தனக்கான இடத்தை வரைந்தெடுத்த கவிஞர் தில்லைநாதன் பவித்திரன் தலைமையில் இடம்பெற்ற இந் நூல் வெளியீட்டு நிகழ்வில் நூலுக்கான அறிமுகத்தை வளர்துவரும் ஆய்வாளர் திரு சி. பிரகாஸ் அவர்கள் நிகழ்த்தினார். நூலுக்கான நயவுரகயை திருக்கோணமலை வயலக்கல்விப்பணிப்பாளர் திரு சி.ஸ்ரீதரன் அவர்கள் நிகழ்த்த நூலாய்வுரையை தென் கிழக்குப்பல்கலைக்கழக விரிவுரையாளர் முனைவர் அ.ப.மு அஸ்ரப் அவர்கள் நிகழ்த்தினார் .

குறித்த நூலின் முதற்பிரதியினை லயன்மருத்துவர் ப. சுரேன்கந்தவேள் நூலாசிரியரிடமிருந்து பெற்றுக்கொண்டார்

இந்நிகழ்வுக்கான முதன்மை அழைப்பாளராக நூலாசிரியரின் கணித ஆசிரியை திருமதி .தவமணி இரத்தினராஜா அவர்கள் கலந்துகொண்டதோடு திருக்கோணமலையின் சமகால இலக்கியவாதிகளும் இலக்கிய ஆர்வலர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *