இலங்கை வாழ் தமிழர்கள் என்ற ரீதியில் செந்தில் தொண்டமானிற்கு World Book of Records விருதுக்கு பல நாடுகளின் உறுப்பினர்களினால் பரிந்துரைக்கப்பட்டு விருது கிடைத்தமையானது நாம் பெருமை படவேண்டிய விடயமே என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வாழ்த்து தெரிவிப்பு
இன்று உலகத்தரம் வாய்ந்த சர்வதேச சான்றிதழ் வழங்கும் நிறுவனங்களில் World Book of Records முதன்மையானதாக செயற்பட்டு வருகின்றது . அதன் முதன்மை குறிக்கோள் உலக தரத்தின் செயல்பாடுகள் என்று அழைக்கப்படும் நிகழ்வுகளை பதிவு செய்தல் கெளரவித்தல் பட்டியலிடுதல் பாராட்டுதல் அங்கீகரித்தல் மற்றும் தீர்ப்பளித்தல் ஆகும் ஐரோப்பாஇ வட அமெரிக்காஇ தென் அமெரிக்காஇ ஆப்பிரிக்காஇ ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் உலகளாவிய சான்றோர்கள் முன்னிலையில் பல்வேறு சாதனையாளர்களுக்கு விருது வழங்கி அவர்களுடைய சாதனைகளை கெளரவிக்கிறது றுழசடன டீழழம ழக சுநஉழசனள நிறுவனம் .
அறிவியல் , விளையாட்டு, கலை, தொழில்நுட்பம், சுகாதாரம் , சுற்றுச்சூழல் ,சமூக மாற்றம் ஆகிய துறைகளில் சிறந்த சாதனையாளர்களை அடையாளப்படுத்தி அவர்களின் பணிகளை உலகறிய செய்கிறது World Book of Records நிறுவனம்.
இந்நிலையில் இலங்கையின் மிக பழமையான தொழிற்சங்கமாக உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும்இ பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான்இ இலங்கையில் மட்டுமின்றி பிற நாடுகளிலும் முன்னெடுத்த கொவிட் பெருந்தொற்று பணி மற்றும் மக்களோடு மக்களாக களத்தில் மிகச் சிறப்பான செயல்பாடுகளை மேற்கொண்டதற்காகவும் சிறந்த சமூக சேவையாளராக செயற்பட்டமைக்காக அவருடைய பெயர் பரிந்துரைக்கப்பட்டு World Book of Records விருது வழங்கப்பட்டுள்ளது
இலங்கை, இந்தியா, நோர்வே, சுவீடன், பிரான்ஸ் , ஜெர்மனி ஆகிய நாடுகளின் World Book of Records நிறுவனத்தை சேர்ந்த குழு உறுப்பினர்களினால் இந்த கொவிட் தொற்று காலத்தில் எமது அரசின் நடவடிக்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்லுதல்இ தனி நபர் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வுஇ கொவிட் பெருந்தொற்று காலத்தில் முககவசம்இ தடுப்பூசிஇ சமூக இடைவெளி குறித்து மக்களிடம் சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தியதுஇ முககவசம் அணிவதை வலியுறுத்தி மக்கள் மத்தியில் பிரச்சாரத்தை நடத்தியது என மக்கள் நலனை முன்னிறுத்தி செந்தில் தொண்டமான் பணியாற்றியதற்காக World Book of Records விருதுக்கு இவருடைய பெயர் பரிந்துரைக்கப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது
இலங்கை அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் செந்தில் தொண்டமானிற்கு தேசிய தரத்திலான World Book of Records விருது கிடைத்துள்ளமையானது நாம் அனைவரும் பெருமை படவேண்டிய விடயமாக உள்ளதுடன் இன்று மக்கள் பிரச்சினைகளை கண்டு ஒதுங்கி இருப்பவர்கள் மத்தியில் மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து சிறந்த சமூகசேவையாளராக செயற்பட்டு வரும் செந்தில் தொண்டமானிற்க்கு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றார்


அமைச்சரின் ஊடக இணைப்பாளர்
இரா.சுரேஸ்குமார் 0714551010

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *