மட்டகளப்பு மாவட்டத்தில் கடற்றொழில் மற்றும் நீரியல்வளங்கள் திணைகளத்தின் ஊடாக நூறு ஏக்கர் நிலப்பரப்பில்  முன்னெடுக்கப்பட்டு வரும் இறால்  வளர்ப்பு திட்டத்தில்  மட்டகளப்பு மாவட்டதத்தின் வாகரை பிரதேசத்தினை சார்ந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வேண்டுகோள்!  


மட்டகளப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட வட்டவான் மற்றும் பணிச்சங்கேனி ஆகிய பிரதேசங்களில்   கடற்றொழில் மற்றும் நீரியல்வளங்கள் திணைகளத்தின் ஊடாக நூறு ஏக்கர் நிலப்பரப்பில்  முன்னெடுக்கப்பட்டு வரும் இறால்  வளர்ப்பு  தொடர்பான அபிவிருத்தி பணிகளை  கள விஜயம் ஒன்றை மேற்கொண்டு  கடற்றொழில் மற்றும் நீரியில் வளங்கள்  இராஜாங்க அமைச்சர்   காஞ்சனா விஜேசேகர மற்றும் பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி மற்றும் வீட்டு விலங்கின  வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை  மேம்பாட்டு   இராஜாங்க அமைச்சர்  சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் மட்டகளப்பு மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவரும்  பாராளுமன்ற உறுப்பினருமான   பிள்ளையான் கடற்றொழில் மற்றும் நீரியல்வளங்கள் திணைகளத்தின் உயர்மட்ட அதிகாரிகளின் பங்குபற்றலில்  அபிவிருத்தி பணிகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இதன்போது இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனினால் வாகரை பகுதியில் முன்னெடுக்கப்படும் இறால் வளர்ப்பு திட்டத்துக்கு மட்டகளப்பு மாவட்டத்தின்  வாகரை பிரதேசத்தினை சார்ந்த பயனாளிகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என   கடற்றொழில் மற்றும் நீரியில் வளங்கள்  இராஜாங்க அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தார். அதற்கு இராஜாங்க அமைச்சர் இனக்கம் தெரிவித்துள்ளார்

அமைச்சரின் ஊடக இணைப்பாளர்
 இரா.சுரேஸ்குமார் 0714551010

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed