கொவிட்-19 பரவல் காரணமாக, குருதித் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையால், சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைய, குருதிக் கொடை வழங்க முன்வருமாறு தேசிய குருதி மாற்றல் சேவை மையம், பொதுமக்களைக் கோரியுள்ளது.

கொவிட்-19 பரவலினால், குருதிக் கொடை திட்டங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளமையால், நாட்டில் குருதித் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குருதிக் கொடை வழங்க எதிர்பார்க்கும் கொடையாளிகள் நாட்டின் பிரதான வைத்தியசாலைகளுக்கும்இ குருதி வழங்கல் மத்திய நிலையங்களுக்கும் சென்றுஇ குருதி வழங்க முடியும் என தேசிய குருதி மாற்றல் சேவை மையம் தெரிவித்துள்ளது.

குருதி வழங்குவதற்கான நேரத்தை ஒதுக்கிக்கொள்வதற்காகஇ nடிவள.hநயடவா.டம என்ற இணையத்தளத்தைப் பயன்படுத்த முடியும் என தேசிய குருதி மாற்றல் சேவை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக, 011 533 2153 அல்லது 011 533 2154 என்ற தொலைபேசி இலக்கங்களைத் தொடர்புகொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed