இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக, தலிபான்களுடன் அமைதியான அதிகார பரிமாற்றத்திற்கு தயார் என ஆப்கானிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது.

தலிபான்கள், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலினுள் நுழைந்துள்ளதாக ஆப்கானிஸ்தானிய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், காணொளி மூலம் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ள ஆப்கானிஸ்தானின் பதில் உள்விவகார அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, தலிபான் பேச்சுவார்த்தையாளர்கள், அதிகார பரிமாற்றத்திற்கான தயார்படுத்தல்களுக்காக, ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகைக்கு செல்வதாக ஆப்கானிஸ்தான் அதிகாரி ஒருவரை மேற்கொள்காட்டி வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இதேவேளை, தலைநகரில் உள்ள மக்கள், காபூலை விட்டு வெளியேற விரும்புவார்களாயின், அவர்களை துன்புறுத்தாமல் வெளியேறுவதற்கான வழி ஒன்றினை ஏற்படுத்திக் கொடுக்குமாறு, தலிபான் தமது ஆயுததாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், காபூலில் உள்ள அமெரிக்க தூதுரக பணியாளர்களை அங்கிருந்து வெளியேற்றும் செயற்பாடுகள் தற்போது இடம்பெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *