மடூல்சீமை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ரோபேரி பகுதியில் 14 வயதுடைய சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கர்ப்பமடைய செய்த குற்றச்சாட்டில் 35 வயதுடைய நபர் ஒருவரை மடூல்சீமை பொலிஸார் நேற்றைய தினம் (17/08) கைது செய்துள்ளனர்.

மேலும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ரோபேரி பகுதியிலுள்ள குடும்பநல உத்தியோகத்தர் சிறுமி கர்பமடைந்த விடயத்தினை மடூல்சீமை பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய மடூல்சீமை பொலிஸ் மகளிர் பிரிவினர் குறித்த சிறுமியிடம் விசாரணைகளை மேற்கொண்டனர். இதன்போது குறித்த சிறுமி கர்ப்பம் தரித்திருப்பதாகவும் தனது வீட்டுக்கு சிநேக பூர்வமாக வந்து செல்லும் 35 வயதுடைய குறித்த சந்தேக நபராலேயே தான் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக மகளிர் பிரிவு பொலிஸாரிடம் கூறினார். இதனை தொடர்ந்து குறித்த நபரை கைது செய்வதற்காக பொலிஸார் சென்ற வேளை சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து நேற்று குறித்த நபர் மறைந்திருப்பதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றமையை அடுத்து குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

இன்றைய தினம் (18./08) சந்தேக நபரை பதுளை நீதிவான் நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்திய போது 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

குறித்த நபர் ஏற்கனவே இரண்டு திருமணங்கள் முடித்தவர் ஆவ்விருவரும் மடூல்சீமை கல்லுள்ள பகுதியையும் பதுளை வெவஸ்த பகுதியையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *