திருகோணமலை மாவட்டத்தில் நேற்று (18 .08.2021) கடந்த 24 மணித்தியாலங்களில் 225தொற்றாளர்கள்
இனங்காணப்பட்டுள்ளனர் . நேற்று பதிவான 4 மரணங்களோடு திருக்கோணமலை மாவட்டத்தில் 182 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளது .

நேற்றைய நாளில் அதிகபடியாக உப்புவெளி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 49 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள் அதேவேளை இதுவரை 7258 பேர் கொவிட் தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளனர் அதிகபடியாக 1813 தொற்றாளர்கள் திருகோணமலை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது .

மேலும் திருகோணமலை மாவட்டத்தில் இம்மாதம் 18 நாட்களில் 2157 ஆக கொரோணா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 33 மரணங்களும் பதிவாகியுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *