மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதோடு, விசேட உரையொன்றையும் நிகழ்த்த ஜனாதிபதி தயாராகிவருவதாகவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

நாட்டில் அதிகரித்து வரும் கொவிட் பரவல் நிலைமை காரணமாக ஒருவாரத்துக்கு நாட்டை முடக்குமாறு மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் நேற்று வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில் மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை ஏற்று நிறைவேற்ற ஜனாதிபதி தயாராகி வருவதாக சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *