60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு இன்றைய தினம் பசறை மத்திய மகா வித்தியாலயத்தில் கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டது. இதன்போது இன்று காலை (27/08) 9 மணி முதல் ஆரம்பமான கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் பசறை சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பசறை சுகாதார பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் அனைவரும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமலும் சமூக இடைவெளியை பேணாமலும் முதியோர்கள் அனைவரும் ஒன்று கூடி இருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.

பசறை சுகாதார பிரிவில் நேற்றைய தினம் மாத்திரம் பசறை அம்மணிவத்தை பகுதியில் 67 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனைகளில் 36 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பசறை பொது வைத்தியசாலையில் வெளி நோயாளர் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனைகளில் 08 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மொத்தமாக 44 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் மக்கள் சிந்திக்காமல் செயல்படுவது கவலையளிக்கின்றது.

இருப்பினும் பசறை சுகாதார பிரிவிற்கு உட்பட்ட ஒவ்வொரு கிராம சேவகர் பிவுகளிலும் இவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்தால் இப்படியான நிலைமை ஏற்பட்டு இருக்காது என மக்கள் விசனம் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *