கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும் தேசிய ஜனநாயக ஆசிரிய சங்கத்தினருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கல்வி அமைச்சில் இன்று இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக அந்த சங்கத்தின் பொது செயலாளர் எஸ்.பாலசேகரம் தெரிவித்துள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசல் மற்றும் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களை கருத்திற் கொண்டு மிக விரைவில் உரிய தீர்வை முன்வைக்குமாறு அந்த சங்கத்தினர் கோரியுள்ளனர்.

இதேவேளை, ஆசிரியர்களும் பல்வேறு அழுத்தங்களுக்கும் உள்ளாகி இருப்பதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமது பயிற்சியை நிறைவு செய்துள்ள ஆசிரிய உதவியாளர்களுக்கான நிரந்தர நியமனம் இதுவரையில் வழங்கப்படவில்லை எனவும் தேசிய ஜனநாயக ஆசிரிய சங்கத்தினர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed