தொப்பிகல, நரகமுல்ல பகுதியில் முன்னெடுக்கப்படும் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் அநுராதபுர யுகத்தை சேர்ந்த பௌத்த விகாரையொன்றின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம், இராணுவம் மற்றும் தொல்பொருள் முதுகலை பட்டப்படிப்பு நிறுவனத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ உள்ளிட்டோர் இந்த அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அகழ்வாராய்ச்சி முன்னெடுக்கப்படும் விகாரை தொகுதியில் இருந்து 16 கல்வெட்டுக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, காவன்திஸ்ஸ மன்னனினால் வழங்கப்பட்ட நன்கொடை தொடர்பிலான கல்வெட்டும் இதில் அடங்குகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *