இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் 623 பொருட்களுக்கு நூற்றுக்கு நூறுவீத உத்தரவாத தொகையை இறக்குமதியாளர்கள் செலுத்தவேண்டுமென அறிவித்திருக்கிறது இலங்கை மத்திய வங்கி.

தொலைபேசி , தொலைக்காட்சி, கைக்கடிகாரம், குளிர்சாதன பெட்டி, ரப்பர் டயர்கள், பழங்கள், குளிரூட்டிகள், பானங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் உட்பட 623 எச்எஸ் குறியீடு பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய வங்கி 100 வீத உத்தரவாத தொகையை அறிவித்திருக்கிறது.

மத்திய வங்கியின் இந்த அறிவிப்பினால் மேற்படி பொருட்களுக்கான இறக்குமதியில் தாக்கம் ஏற்படும் அதேசமயம் அந்தவகை பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed