திருகோணமலை மாவட்டத்தில் நடப்பு மாதத்தின் முதல் எட்டு நாட்களில் 43 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும் 1116 பேர் தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தின் தொற்றுநோய்க்கட்டுப்பாட்டுப்பிரிவு தெரிவித்துள்ளது.

திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தினால் கடந்த (08)திகதி வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த எட்டாம் திகதி வரை 10 ஆயிரத்து 931 பேர் தொற்றுக்குள்ளதாகியுள்ளனர் 291 மரணங்கள் பதிவாகியுள்ளது ,158 கர்ப்பிணி தாய்மார்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு பகுதியில் 2466 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் பதவிசிறிபுர பகுதியில் 218 பேரும், கோமரங்கடவல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 374 பேரும்,குச்சவெளியில் 1187 பேரும்,உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் 11831 தொற்றாளர்களும், மூதூரில் 1461 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் கிண்ணியாவில் 659 பேரும்,குறிஞ்சாங்கேணியில் 448 பேரும், கந்தளாயில் 1321 பேரும், தம்பலகாமத்தில் 660பேரும், சேருவில பிரதேசத்தில் 244 பேரும், ஈச்சிலம்பற்று பிரதேசத்தில் 62 பேரும் இதுவரை தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் குறிப்பிட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *