திருகோணமலை மாவட்டத்தில் நேற்று

(09.09.2021) கடந்த 24 மணித்தியாலங்களில் 137 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் .
நேற்று பதிவான 08 மரணங்களோடு திருக்கோணமலை மாவட்டத்தில் 299 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளது .

நேற்றைய நாளில் அதிகபடியாக குச்சவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 25 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள். அதேவேளை இதுவரை திருகோணமலை மாவட்டத்தில் 11067 பேர் கொவிட் தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளனர் . அதிகபடியாக 2493 தொற்றாளர்கள் திருகோணமலை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது .

மேலும் திருகோணமலை மாவட்டத்தில் இம்மாதம் கடந்த ஒன்பது நாட்களில் 1253 ஆக கொரோணா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் 51 மரணங்களும் பதிவாகியுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *