யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குழந்தை பிரசவித்த தாய் ஒருவர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 42 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குழந்தை பிரசவத்திற்கு முன்னர் குறித்த பெண்ணுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனைகளில் கொவிட் தொற்று உறுதியானது.

எனினும், குழந்தை பிரசவத்தின் பின்னர் இந்த பெண்ணுக்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதால் அவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, அப்பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *