தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை இன்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். 

அண்மையில் இராஜாங்க அமைச்சர் ஒருவரால் தமிழ் அரசியல் கைதிகள் அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன், இராசமாணிக்கம் சாணக்கியன் உள்ளிட்டோர் இந்த சந்திப்பினை மேற்கொண்டுள்ளனர். 

இதன்போது, சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு மற்றும் அவர்களை விடுவிப்பது தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார். 

இந்தநிலையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்ட நாட்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

அத்துடன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இராஜாங்க அமைச்சருக்கு எதிராக அவர் அங்கத்துவம் வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஒழுக்காற்று நடவடிக்கையினை விரைவில் எடுப்பதற்கு முன்வர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed