தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் காரியாலயமான அறிவகம் செல்லும் வீதியில் காவற்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

அந்த பகுதியில் பயணிப்போரை காவற்துறையினர் சோதனையிட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் உயிர்துறந்த திலீபனின் 34 ஆவது  நினைவேந்தல் நிகழ்வு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் காரியாலத்தில் நாளைய தினம், இடம்பெறவுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவல்களையடுத்து இவ்வாறு சோதனையிடப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. 

இந்தநிலையில், கிளிநொச்சி காவல் நிலைய பொறுப்பதிகாரி இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் காரியாலயத்திற்கு சென்று அது தொடர்பில் விளக்கமளித்துள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *