ஆப்கானிஸ்தானில் ஹெல்மன் பகுதியில் வசிக்கும் ஆண்கள் முகச்சவரம் செய்வதற்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.

எந்தவொரு ஆணுக்கும் முகச்சவரம் செய்யக் கூடாது என அப்பிரதேசத்தில் வாழும் முடி திருத்துநர்களுக்கு தலிபான்கள் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முகச்சவரம் செய்வதானது இஸ்லாமிய சட்டத்திற்கு முரணானது என தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த உத்தரவை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, காபூல் தலைநகரிலும் ஆண் முகச்சரவம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *