மாத்தறை, கந்தர பிரதேசத்தில் தன்னை கைதுசெய்ய முயன்ற காவல்துறை அதிகாரிகள் இருவரின் கைகளை கடித்துவிட்டுத் தப்பியோட முயற்சித்த நபரை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அத்துடன், காயமடைந்த காவல்துறை அதிகாரிகள் இருவரும் தலல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

கொலை வழக்கொன்றின் சாட்சியாளர் ஒருவருக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக கடந்த 25 ஆம் திகதி கிடைக்கப்பெற்ற முறைப்பாடுக்கமைய, குறித்த சாட்சியாளரின் வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 

காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கும் சந்தர்ப்பத்தில் அவ்விடத்திற்கு சந்தேகநபர் வாளுடன் வருகைத் தந்துள்ளதுடன், அவரை கைது செய்வதற்கு முயற்சித்தபோதே காவல்துறை அதிகாரிகளின் கைகளை கடித்து அவர் தப்பிக்க முயன்றுள்ளார்.

இதனையடுத்து. காவல்துறை அதிகாரிகள் அவரை மடக்கிப்பிடித்து கைதுசெய்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *