சர்வதேச ரீதியில் பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பன நேற்றிரவு திடீரென செயலிழந்தமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.

இந்தச் செயலிகளுக்கான திசைவியில் (ரவுட்டர்) ஏற்பட்ட முறையற்ற மாற்றம் காரணமாக அவை நேற்றிரவு செயலிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், குறித்த சமூக வலைத்தளங்கள் இன்று அதிகாலை மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளதாகப் பேஸ்புக் நிறுவனம் அறிவித்திருந்தது.

அத்துடன் குறித்த இடையூறுக்கு தாம் மன்னிப்பு கோருவதாக பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவுனரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மார்க் ஸக்கர்பேர்க் தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed