திருகோணமலை ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரவெவ பகுதியில் மரமொன்று வீழ்ந்ததில் 14 வயது சிறுவன் பலியாகியுள்ளார்

இன்று காலை உழவு இயந்திரத்தில் அமர்ந்திருந்த சிறுவன் மீது திடீரென மரம் முறிந்து வீழ்ந்ததில் படுகாயமடைந்த குறித்த சிறுவன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரவ்பொத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *