திருகோணமலை நகர்ப்பகுதிக்கு அன்மையிலுள்ள லிங்கநகர் சந்தியில் அமைந்துள்ள Lanka IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசலுடன் மண்ணெண்ணெய் கலந்து விற்பனை செய்யப்படுவதாக திருகோணமலை தலைமைய காவல்துறையினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையம் சோதனையிடப்பட்டது .

குறித்த எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் டீசல் கலப்படம் பற்றிய பரிசோதனைக்காக டீசல் செய்வதற்காக மாதிரியினை காவல்துறையினரால் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது .

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed