வரைபட வாயிலில் அல்லை இடது கரை
பெரும்போக வயற்காட்டின் நடுவே
சர்ப்பத்தின் சாலை வளைவினை
சறுக்கலுடன் கடக்கையில்
குறைவில்லாச் செல்வமகள் மாவலியாள்
குறுகிய கிளையால் ஓர் பக்க அரனாய் அமைந்திருக்க
எல்லையில்லா எம் ஈசன்
லிங்கமாய் அமர்ந்ததே
எம் லிங்கபுரம்

அன்று…
திருமங்கை அரசியவள் ஆட்சியில்
விழாக்கண்ட எம் ஈசன்
பகைவனின் படையெடுப்பால்
திருமங்கை இராட்சியத்தோடு
திருமண்ணில் யோகியாய்ப் புதையுற்றான்

மீண்டும்…
பக்தரின் நலன் காக்க
பத்தனின் விழியில்ப் புலனாகிப்
பத்திரமாய் ஸ்தாபிக்கப்பட்டான்
மகத்தான எம் மண்ணில்
மஹாதேவனாய் மாண்புடன்
மாவலியை நோக்கிய வண்ணமாய்

இத்தகைய இருப்பில்…
தொன்மையின் சின்னமாய்
தொண்டனின் நாடியாய்
பகைவனைத் தண்டித்து
அன்பனை அரவணைத்து
திருநீல கண்டனாய் திருவருள் பாலிக்கும்
எம் இறைவன் உறையும் உன்னத பூமியே
எம் லிங்கபுரம்.

                 ( சிவானி சூரியமூர்த்தி)
One thought on “எம் லிங்கபுரம்”
 1. கவிதைகள் அனைத்தும் மிகவும் நன்றாக இருக்கின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *