Month: September 2021

ஊடகவியலாளர்களை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்த அதிகாரிகள் மீது வீசாரணைகள் ஆரம்பம் .

ஊடகவியலாளர்கள், குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டமை தொடர்பில் பொறுப்பற்ற வகையில் செயற்பட்ட அதிகாரிகள் தொடர்பில் காவல்துறைமா அதிபரின் உத்தரவில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.…

ஆட்பதிவுத் திணைக்கள அலுவலங்கள் நாளை முதல் வழமைக்கு

பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகமும், ஏனைய பிராந்திய அலுவலகங்களும் எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன.  இதனை ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர்…

நாளைமுதல் அமுலாகும் புதிய சுகாதார வழிகாட்டல்கள்

நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாளை அதிகாலை 4 மணியுடன் நீக்கப்படவுள்ளது. இந்நிலையில், பொது மக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார விதிமுறைகள் அடங்கிய வழிகாட்டி சுகாதார சேவைகள் பணிப்பாளர்…

மட்டக்களப்பில் சகல விளையாட்டு மைதானங்களும் விரைவில் அபிவிருத்தி .

30.09.2021 மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களின் விளையாட்டு துறையை ஊக்குவிப்பதற்காக மாவட்டத்தின் அனைத்து விளையாட்டு மைதானங்களும் அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது இதனடிப்படையில் மட்டக்களப்பு படையாண்டவெளி இளந்தளிர் இளைஞர் கழக விளையாட்டு மைதானத்திற்கான முதற்கட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று 30.09.2021 வியாழக்கிழமை இடம்பெற்றது. பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த விளையாட்டு மைதானத்திற்கான அபிவிருத்தி திட்டத்திற்கான அடிக்கல்லினை நாட்டிவைத்தார். இந்த நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சின்னத்துரை புஸ்பலிங்கம், இராஜாங்க அமைச்சரின் பட்டிப்பளை பிரதேசத்திற்கான பிரதான அமைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமாகிய வை.சந்திரமோகன், இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர்கள் மற்றும் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் உள்ளிட்ட கிராம மக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர். அமைச்சரின்  ஊடக இணைப்பாளர் இரா.சுரேஸ்குமார் 0714551010—

வீடுகள் இல்லாத அனைவருக்கும் வீடுகள் என்கிறார் அமைச்சர் வியாழேந்திரன் .

வீடுகள் இல்லாத  அனைவருக்கும்  வீடுகள் பெற்றுக்கொடுப்பதட்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு  வருகின்றது இதனடிப்படையில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான  வீடுகள் அமைத்துக் கொடுக்க…

அப்புத்தளை பிரதேச சபையின் 2022 க்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை 19 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது

இன்று காலை 09.30 மணி அளவில் அப்புத்தளை பிரதேச சபையில் ஆரம்பமான அப்புத்தளை பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கை பிரதேச சபையின் தவிசாளர்…

சீனி இறக்குமதிக்கு அனுமதி .

வெள்ளை சீனியை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் தமயந்தி கருணாரத்ன தெரிவித்துள்ளார். இதன்படி, இன்று (30) முதல் வெள்ளை சீனியை இறக்குமதி செய்ய…

நாட்டு மக்களுக்கு இராணுவத் தளபதி விடுத்துத்துள்ள முக்கிய செய்தி .

நாடு முழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாளை (01) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது. எனினும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனக்…

சிகரெட் விலை அதிகரிக்கலாம் .

அரச வருமானத்தை உயர்த்துவதற்காக அடுத்த வருடத்திற்கான பாதீட்டில் சிகரெட்டுக்கான வரியை அதிகரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பெரும்பான்மையானோர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம்…

சீனாவின் சேதன பசளைக்கு தடை

சீனாவிலிருந்து சேதன பசளையை இறக்குமதி செய்வதனை தடைசெய்யத் தீர்மானித்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக சீனாவிலிருந்து சேதன பசளை இறக்குமதி செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த…