திருகோணமலை மாவட்டத்தில் நேற்று (19 .08.2021) கடந்த 24 மணித்தியாலங்களில் 149 தொற்றாளர்கள்
இனங்காணப்பட்டுள்ளனர் . நேற்று பதிவான 6 மரணங்களோடு திருக்கோணமலை மாவட்டத்தில் 188 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளது .

நேற்றைய நாளில் அதிகபடியாக உப்புவெளி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 29 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள் அதேவேளை இதுவரை 7407 பேர் கொவிட் தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளனர் . அதிகபடியாக 1839 தொற்றாளர்கள் திருகோணமலை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது .

மேலும் திருகோணமலை மாவட்டத்தில் இம்மாதம் 19 நாட்களில் 2306 ஆக கொரோணா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 39 மரணங்களும் பதிவாகியுள்ளது .

இதுவரை 113 கற்பினித்தாய்மார் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed