மூதூர் பிரதேச செயலகத்துக்குட்பட்ட சேனையூர் கிராமசேவகர் பிரிவின் சீதனவெளிக் கிராமத்தில் உள்ள கலையுதயம் முள்பள்ளிக் கட்டடத்தில், இன்று (2021.08.20) வெள்ளிக்கிழமை, மாலை 4.00 மணியளவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீப்பரவலை அவதானித்த பொதுமக்கள் ஒன்றிணைந்து தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபோதிலும் தீப்பரவலால் முன்பள்ளிக் கட்டடம், கூரைப்பகுதி, தளபாடங்கள், மற்றும் சிறார்களின் கற்றல் உபகரணங்கள் என்பன சேதமடைந்துள்ளன.

தீப்பரவலுக்கான காரணம் கண்டறியப்படவில்லை.

இன்று மாலை 4.00 மணியளவில் சீதனவெளிக் கிராமத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் மழைக்குரிய காலநிலை காணப்பட்டுள்ளது. பாரிய மழை பொழிவு இல்லாவிட்டாலும், சிறியளவிலான மின்னல் மற்றும் இடி முழக்கம் உணரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நன்றி : கிராமத்தின் குரல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *