தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்கள் செயற்பட வேண்டிய முறைமைகள் தொடர்பான வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதற்கமைய சுகாதார, பாதுகாப்பு தரப்பினர், விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர், அத்தியாவசிய பொருட்களை விநியோகத்தில் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு இந்த காலப்பகுதியில் அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவையாளர்கள் தங்களது பணிக்கு செல்வதற்கு எந்தவித இடையூறும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர காவல்துறையினர், கிராம சேவகர்கள் மற்றும் அத்தியாவசிய பணிக்குழாமினர் அடங்களாக உள்ளூராட்சி மன்றங்கi முன்னெடுத்து செல்ல முடியும் என சுகாதார அமைச்சின் வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரையறுக்கப்பட்ட நிதி கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளுக்காக வங்கிகள் திறக்கப்படுவதோடு இணையம் ஊடான கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளை ஊக்குவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

மின்சாரம், நீர், எரிபொருள் நிலையங்கள் உள்ளிட்ட சேவைகளை முன்னெடுக்க முடியும்.

நிர்மாணப்பணிகளில் நாளாந்த வேதனம் பெரும் பணியாளர்கள் சேவையில் ஈடுபட முடியும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சகல வழிபாட்டுஸ்தலங்கள், கூட்டங்கள், சிற்றுண்டிச்சாலைகள், உணவகங்கள், வாராந்த சந்தைகள், மேலதிக வகுப்புகள் என்பவற்றை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியில் முன்னெடுக்க முடியாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு சில்லரை பொருட்கள் மற்றும் வெதுப்பக உற்பத்தி பொருட்களை விநியோகிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *