திருகோணமலை மாவட்டத்தில் நேற்று (21 .08.2021) கடந்த 24 மணித்தியாலங்களில் 143 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் .
நேற்று பதிவான 8 மரணங்களோடு திருக்கோணமலை மாவட்டத்தில் 202 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளது .

நேற்றைய நாளில் அதிகபடியாக உப்புவெளி மற்றும் மூதூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் தலா 35 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள். அதேவேளை இதுவரை 7707 பேர் கொவிட் தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளனர் . அதிகபடியாக 1880 தொற்றாளர்கள் திருகோணமலை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது .

மேலும் திருகோணமலை மாவட்டத்தில் இம்மாதம் கடந்த 21 நாட்களில் 2606 ஆக கொரோணா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 53 மரணங்களும் பதிவாகியுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *