பயங்கரவாதத் தடை சட்டத்திற்கு அமைய, பரிந்துரைகள் மற்றும் தீர்மானங்களை முன்வைப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஆலோசனை சபையொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் சட்டத்துறைப் பணிப்பாளர் நாயகம் உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹனதீர இதனை தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் 13ஆவது பிரிவுக்கு ஏற்ப, குறித்த ஆலோசனை சபை நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் சட்டத்துறை பணிப்பாளர் நாயகம், உயர்நீதிமன்ற சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹனதீர தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதம நீதியரசர் அசோக டி சில்வா தலைமையிலான நியமிக்கப்பட்டுள்ள குறித்த ஆலோசனை சபையில், ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆர்.ஹெய்யந்துடுவ மற்றும் ஓய்வுபெற்ற மன்றாடியார் நாயகம் சுஹத கம்லத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *