பதுளை மற்றும் மொனராகலை ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கிய ஊவா மாகாணத்தில் கோவிட் 19 தொற்றாளர்கள் 838 பேர் இன்று 27.8.2021 அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 14பேர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளனர்.
ஊவா மாகாண சுகாதர சேவை பணியகத்தினால் வெளியிடப்பட்ட கோவிட் 19 நேற்று மற்றும் மரணங்கள் குறித்த விபரப்பட்டியலில் மேற்கண்ட விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தில் 495 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் எட்டுப்பேர் உயிரிழந்துள்ளனர். மொனராகலை மாவட்டத்தில் 343 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அறுவர் உயிரிழந்துள்ளனர்.
பதுளை 83 பேர் , பண்டாரவளை 35 பேர், எல்ல 37பேர், கிரார்துருகோட்டை 07 பேர், ஹல்துமுள்ளை – 51 பேர், ஹாலிஎல – 07பேர், ஹப்புத்தளை -56பேர், கந்தகெட்டிய -06பேர், லுணுகலை -09பேர், மகியங்கனை -13பேர், மிகாகிவுல – 03பேர், பசறை -22பேர், ரிதிமாளியத்த – 94பேர் , சொரணதொட்டை 09 பேர், ஊவா- பரனகம – 43பேர், வெலிமட -20பேர் என்றவகையில் 495 பேர் கோவிட் 19 தொற்றாளர்களாகவுள்ளனர். இவர்களில் பதுளை, எல்ல, கிராந்துருகோட்டை, ஹல்துமுள்ளை, ஹாலிஎல, ஹப்புத்தளை ஆகிய இடங்களில் தலா ஒருவர் என்றடிப்படையில் ஆறுபேரும், வெலிமடையில் இருவருமாக எட்டுப்பேர் உயிரிழந்துள்ளனர்.

மொனராகலை -66 பேர், சியாம்பலாண்டுவை-41பேர். மடுல்ல -12பேர், மெத்கம -42பேர் பிபில -17பேர். படல்கும்பரை -21பேர், புத்தலை – 42பேர், வெள்ளவாய- 64பேர், தனமல்வில -05பேர், செவனகல – 15பேர், கதிர்காமம் – 18பேர், என்றவகையில் 343 பேர் கோவிட் 19 தொற்றாளர்களாகவுள்ளனர்;. இவர்களில் பிபிலையில்ஒருவரும், படல்கும்பரையில் இருவரும், வெள்ளவாயாவில் மூவருமாக ஆறுபேர் உயிரிழந்துள்ளனர்.
ஹப்புத்தளையில் அடையானம் காணப்பட்ட கோவிட்19 தொற்றாளர்கள் 56பேரில் 16 வயதுகளுக்குற்பட்ட 11 சிறார்களும் உள்ளடங்கியுள்ளதாக, பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் எஸ்.சுதர்சன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed