மடூல்சீமை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பட்டவத்தை பகுதியில் பாரிய அளவில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் நேற்று மாலை (30/08) 6.30 மணியளவில் மடூல்சீமை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மடூல்சீமை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து பட்டவத்தை பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த இடத்தை சுற்றிவளைத்த பொலிஸார் ஐந்து லட்சம் மில்லி லீட்டர் கோடாவும், நீர்த்தாங்கி ஒன்றையும், எரிவாயு அடுப்பு ஒன்றையும் கைப்பற்றியதோடு மேலும் சில உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் 33 வயதுடைய நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளை மடூல்சீமை பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு சந்தேக நபர் மீது வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

அதே பகுதியில் 750 மில்லி லீட்டர் சகிப்பு தன்கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் மேலும் 33 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

(செய்தி ராமு தனராஜா)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed