திருகோணமலை மாவட்டத்தில் நேற்று (31 .08.2021) கடந்த 24 மணித்தியாலங்களில் 235 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் .
நேற்று பதிவான 07 மரணங்களோடு திருக்கோணமலை மாவட்டத்தில் 248 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளது .

நேற்றைய நாளில் அதிகபடியாக திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 60 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள். அதேவேளை இதுவரை திருகோணமலை மாவட்டத்தில் 9815 பேர் கொவிட் தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளனர் . அதிகபடியாக 2264 தொற்றாளர்கள் திருகோணமலை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது .

மேலும் திருகோணமலை மாவட்டத்தில் இம்மாதம் கடந்த ஆகஸ்ட் மாதம் 4631 ஆக கொரோணா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் கடந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 99 மரணங்களும் பதிவாகியுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed