02.09.2021

உலக சுகாதார ஸ்தாபனம் இத்தருணத்தில் பின்தங்கிய பிரதேச சுகாதார அபிவிருத்திக்கு கை கொடுக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர்  சதாசிவம் வியாழேந்திரன் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்

நேற்றைய தினம் கொழும்பில் அமைந்துள்ள உலக சுகாதார அமைப்பின் இலங்கைக்கான பிரதான காரியாலயத்தில் பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி மற்றும் வீட்டு விலங்கின  வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை  மேம்பாட்டு   இராஜாங்க அமைச்சர்  சதாசிவம் வியாழேந்திரன் மற்றும்  பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் மற்றும் உலக சுகாதார அமைப்பின் இலங்கைக்கான தலைவர் வைத்தியர் அலங்கா சிங் மற்றும் உலக சுகாதார அமைப்பின் வைத்தியர் ஒலிவியா கோராசன் நிவேராஸ் (சுகாதார நிர்வாகி) பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி மற்றும் வீட்டு விலங்கின  வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை  மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் ஹர்ஷ டி சில்வா ஆகியோரை சந்திப்பொன்று இடம்பெற்றது.

 வட கிழக்கு மாகாண மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு சுகாதார பிரச்சனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மத்திய நிலையங்களில் அபிவிருத்தி  கிழக்குமாகாண குழந்தைகளின் விசேட போசாக்கு வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் பெண்களின் தலைமைத்துவத்தின் கீழ் இருக்கும் குடும்பங்களுக்கு WHO ஊடாக முன்னெடுக்கப்படும் விஷேட வேலைத்திட்டங்களில் இணைத்துக் கொள்வது போன்ற முன்மொழிவுகள் இராஜாங்க அமைச்சர் அவர்களினால் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான தலைவரிடம் தெரிவித்தார்  தற்போது நாட்டில் நிலவுகின்ற covid-19 தொடர்பிலான பிரச்சினைகள் குறித்து  உலக சுகாதார ஸ்தாபனத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டங்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் நாட்டில் covid-19 தொற்றை முற்றாக கட்டுப்படுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் பூரண உதவி பெற்றுக்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடினார்.

  மேலும்  மிக விரைவில் தடுப்பூசி வேலைத்திட்டத்தில் கிழக்கு மாகாண மக்கள் , பெருந்தோட்டப் பகுதி மக்களுக்கு முன்னுரிமையளித்து விசேட திட்டமொன்றை அறிமுகப்படுத்துமாறு கோரிக்கை ஒன்றை இதன்போது இராஜாங்க அமைச்சரினால் யோசனைகள் முன்வைக்கப்பட்டது .மேற்கூறிய அனைத்து விடயங்களையும் கருத்தில் கொண்டு தடுப்பூசி திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு திட்டத்தில் WHO அதன் ஆதரவை அனைத்து பகுதிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு சாதகமான முடிவை வழங்குவதாக WHO இலங்கைக்கான தலைவர் வைத்தியர் அலங்கா சிங் உறுதி அளித்தார்.

அமைச்சரின் ஊடக இணைப்பாளர்

ராஜரத்தினம் சுரேஷ்குமார் 0714551010–

SURESHRAJARATHNAM

Journalist

 0714551010/0776682998

SURESHRAJARATHNAM

Journalist

 0714551010/0776682998

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed