வீரியம் மிக்க பரவல் தன்மையுடைய டெல்டா வைரஸ் திரிபானது, முழுமையாக தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களுக்கும் தொற்றக்கூடிய நிலை உள்ளதாக, உலகெங்கும் உள்ள விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 

இவ்வாறாக மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வின் தகவல் ‘நேச்சர்’ சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது. 

டெல்டா திரிபானது, மனிதர்களின் நோய் எதிர்ப்பு கட்டமைப்பை கடந்துசெல்லக்கூடியது என அதில் மீண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த அறிக்கையை மேற்கோள்காட்டி கருத்து தெரிவித்துள்ள ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல் துறை பிரிவின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர, டெல்டா கொரோனா திரிபுக்கு, இவ்வாறாக நோய் எதிர்ப்பு கட்டமைப்பை கடந்து செல்லக்கூடிய ஆற்றல் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.kottiyaram.com

எனவே, தடுப்பூசி ஏற்றத்தின் பின்னரும், கொவிட்-19 தொற்று உறுதியாவதை தவிர்ப்பதற்கு, சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றவேண்டிதன் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed