மட்டக்களப்பு ஏறாவூர் காவல்துறை பிரிவிற்குட்பட்ட புன்னக்குடா கடலில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

ஏறாவூர் தைக்கா வீதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவனே இவ்வாறு நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.

தமது நண்பர்களுடன் நீராட சென்ற நிலையில் அவர் அலையில் அள்ளுண்டு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து மீட்கப்பட்ட சிறுவனது சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *