பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ள நிலையில், கொழும்பு மாவட்டத்தில் அதிக விலைக்கு மரக்கறிகளை விற்பனை செய்யும் நடமாடும் வர்த்தகர்களின் உரிமங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் பிரதீப் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

நுகர்வோரிடம் அதிக விலைக்கு மரக்கறிகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, நுகர்வோரிடம் அதிக விலைக்கு மரக்கறிகளை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் தொடர்பில் அறிவிக்க 011 23 69 139 என்ற தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed