20 – 29 வயதுக்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்றும் இரண்டாவதுநாளாக சம்பூர் பிரதேச வைத்தியசாலையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது .

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் வழிகாட்டலில் மூதூர் பிரதேச செயலக மற்றும் சம்பூர் சிறுமலர் ,இளம்பரிதி இளைஞர்கழக உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு வைத்தியசாலை ஊழியர்களால் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது .

எனினும் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளும் குறித்த வயதுக்குட்பட்ட இளைஞர் யுவதிகளின் எண்ணிக்கையில் பாரிய விழுக்காடு நிலவுகின்றமையை அவதானிக்க கூடியதாக இருக்கிறது .

இளைஞர்களுக்கு முறையான தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வின்மையே இதற்கான காரணமாகும் .சமூகத்தில் இளைஞர்களிடையே பரவிய தடுப்பூசி பற்றிய தவறான புரிந்துணர்வை தெளிவுபடுத்த வேண்டிய அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டுமென சிவில் சமூகத்தினர் அங்கலாய்க்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *