பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான சுகாதார வழிகாட்டல்களை கல்வி அமைச்சின் செயலாளரிடம் இன்று ஒப்படைத்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கொவிட் பரவல் காரணமாக பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.

எனினும், நாட்டில் இதுவரையில் கொவிட் அச்சம் முழுமையாக குறைவடையாத நிலையில், பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது சவாலான ஒரு விடயமாகவே உள்ளது.

இந்நிலையில்,பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்காக சுகாதார அமைச்சு தயாரித்த சுகாதார வழிகாட்டி இன்று கல்வி அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தரம் 5 வரையான ஆரம்ப வகுப்புகளை கொண்ட பாடசாலைகளை  திறப்பது தொடர்பான வழிகாட்டல்கள் அதில் அடங்கியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *