ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் இன்று  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரையாற்றவுள்ளார்.

நியூயோர்க்கில் நேற்று ஆரம்பமான ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில், பிரேஸில் ஜனாதிபதி ஜெய்ர் பொல்சொனாரோ (Jair Bolsonaro) ஆரம்ப உரையாற்றினார்.

இதனையடுத்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உரையாற்றியதுடன், மாலைதீவு ஜனாதிபதி இப்றாஹிம் மொஹமட் சோலிஹ் (Ibrahim Mohamed Solih) மூன்றாவதாக உரையாற்றினார்.

இந்நிலையில், நியூயோர்க் நேரப்படி இன்று (22) முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ள அமர்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரையாற்ற உள்ளார்.

அத்துடன், நாளை இடம்பெறவுள்ள உணவுக் கட்டமைப்புக் கூட்டத்தொடரிலும், நாளை மறுதினம் இடம்பெறவுள்ள எரிசக்தி தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடலின்போதும், ஜனாதிபதி தமது கருத்துகளை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed