தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமிருந்த வல்வெட்டித்துறை நகர சபை அதிகாரம், சுயாதீன குழு வசமாகியுள்ளது.

வல்வெட்டித்துறை நகர சபையின் தலைராக பதவி வகித்த கோணலிங்கம் கருணாநந்தராசா, கொவிட்-19 தொற்றினால் அண்மையில் உயிரிழந்ததையடுத்து, புதிய தலைவரை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு இன்று இடம்பெற்றது.

17 உறுப்பினர்களைக்கொண்ட வல்வெட்டித்துறை நகர சபையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 8 வாக்குகளும், சபாபதிப்பிள்ளை செல்வேந்திரா தலைமையிலான சுயாதீன குழுவுக்கு 9 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரும், சுயாதீன குழு வேட்பாளருக்கு ஆதரவளித்துள்ளார்.

இதன்படி, வல்வெட்டித்துறை நகரசபை அதிகாரத்தை சுயாதீனக்குழு கைப்பற்றியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed