கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட தனது மனைவியைக் கொலை செய்துவிட்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்யத் தயாராக இருந்த வர்த்தகர் ஒருவரை பொரலஸ்கமுவவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இறந்த மனைவியின் சொத்துக்களைப் பெற்றுக் கொண்ட பின்னர் வர்த்தகர் திருமணத்தை நடத்தத் தயாராகி வந்ததாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்
அவரது மனைவியின் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட பாதி எரிந்த தலையணை மற்றும் பேப்பர்களையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
குறித்த தம்பதிக்கு 13 மற்றும் 6 வயதில் 02 பிள்ளைகள் உள்ளனர்.

கொரோனா தொற்று உள்ள பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில் மூக்கு மற்றும் வாயில் இறுக்கம் ஏற்பட்டதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு மரணம் ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து கணவரை பொரலஸ்கமுவ பொலிஸார் வரவழைத்து நீண்ட நேரம் விசாரித்து கொலை தொடர்பான அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

மனைவி இறப்பதற்கு முன்பு பூக்கடையில் இறுதி சடங்கிற்கு கூட பணம் கொடுக்கப்பட்டது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *