அமெரிக்காவுக்கு சென்றுள்ள பிரேஸில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனேரோ தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத காரணத்தினால் அங்குள்ள உணவு விடுதியொன்றுக்குள் செல்ல  அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனால் வீதியோர உணவகம் ஒன்றில் அவர் தமது குழுவினருடன் பீஸா சாப்பிட்டிருந்த நிலையில், அதன்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக நியூயோர்க் சென்றுள்ள பிரேஸில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனேரோ, ஏனைய நாட்டு பிரதிநிதிகளுடன் இரவு நேர உணவுக்காக விடுதி ஒன்றுக்கு சென்றுள்ளார்.

அதன்போது அங்கு இருந்த பாதுகாவலர்கள் அவரிடம் கொவிட் தடுப்பூசி செலுத்திகொண்டதற்கான சான்றிதழை கேட்டுள்ளனர். அதற்கு அவர் தான் இன்னமும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் விடுத்திற்குள் செல்வதற்காக அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த சம்பவத்தையடுத்து பிரேஸில் ஜனாதிபதி உள்ளிட்ட ஏனைய நாட்டு பிரதிநிதிகள் கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென நியூயோர்க் மேயர் பில் டே பலசியோ அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *